Thursday, October 18, 2012

TN GOVERNMENT FILED EMERNGENCY PETITION TO TAKE OVER MADURAI ADHEENAM

TN Government filed emergency petition in Madurai Court seeking order to take over Madurai Adheenam. 

Govt has also filed a petition objecting to Nithyananda's appointment as 293rd pontiff of Madurai Adheenam. Judgment is expected tomorrow (19th Oct)

மதுரை ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: இந்து அறநிலையத்துறை அவசர மனு தாக்கல்
 வியாழக்கிழமை, அக்டோபர் 18, 10:16 PM IST

மதுரை,அக்.18-
 
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நியமனம் செல்லாது என்று மதுரையைச் சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, நித்யானந்தாவுக்கு ஆதீன பொறுப்பு வகிக்க தகுதியில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தது. மேலும் நித்யானந்தா நியமனம் செல்லாது என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.
 
இந்நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால் ஒரு அவரசர மனு தாக்கல் செய்தார். அதில், அறநிலையத்துறை அனுமதியின்றி நித்யானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது நியமனம் செல்லாது.
 
மேலும் மதுரை ஆதீன மடத்தை தமிழக அரசே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே எதிர்ப்புகள் அதிகரித்திருப்பதால் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு நித்யானந்தா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 
 
 
 

 

No comments:

Post a Comment